நீ என்னத்த கூவுனாலும் இனி உன்ன வீட்டுல சேத்துக்கமாட்டாங்க! வனிதாவை கலாய்த்த நெட்டிசன்..

Vijaykumar Bigg Boss Vanitha Vijaykumar
By Edward Jul 02, 2022 09:03 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் வாரிசாக அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்து வந்த வனிதா வாய்ப்பில்லாமல் குடும்பத்தினர் பார்த்தவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு விவாகரத்து வரை கொண்டு சென்றது. இதையடுத்து மற்றொருவரை திருமணம் செய்து ஒரு சில ஆண்டுகள் வாழ்ந்த வனிதா அவரையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

பின் தன் குடும்பத்தினரையும் பகைத்து தனியாக இரு மகளுடன் வாழ்ந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒருசில நாளில் அவரது நடவடிக்கை சரியில்லை என்று அவரைவிட்டு பிரிந்தார்.

பின் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தும் சிலரின் ஆதரவையும் பெற்று வந்தார். தற்போது சில படங்களில் நடித்தும் வருகிறார்.

எப்போது தன் குடும்பத்தை சமாதானப்படுத்த பல விசயங்களை செய்து வரும் வனிதா தன் அண்ணன் அருண் விஜய் மற்றும் மைத்துடனான இயக்குனர் ஹரி இயக்கிய யானை படத்திற்கு வாழ்த்து கூறி ஒரு பதிவினை போட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல கடுமையாக கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.