பிக்பாஸ் அல்டிமேட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததே ஒரு பிளான் தான்? மக்களை முட்டாளாக்கிய வனிதா விஜயகுமார்..
தமிழ் சினிமாவில் வாரிசு நட்சத்திரங்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். அப்படி நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். வாரிசு நடிகையாக அறிமுகமாகி அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளாதவர் என்ற பெயரையும் ஆரம்பத்திலேயே பெற்றார்.
திருமண வாழ்க்கை:-
சரியான சென்றிருந்த சினிமா வாழ்க்கையில் தந்தையின் பாசத்தை மீறி சில விஷயங்கள் செய்தார் வனிதா. அதில் ஒன்று ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து வைத்த 5 ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்தார். இதனால் குடும்பத்தினருடன் சண்டைபோட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
அதன்பின், ராஜன் ஆனந்த் என்பவரை திருமண செய்த 3 ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பின் பார்ட்டி நடிகர்களுடன் சகவாசம் என்று சர்ச்சையில் சிக்கிய வனிதா நடன இயக்குனர் ராபர்ட்டுடன் காதலில் இருந்தும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருந்தும் வந்தார். இதனால் குடும்பத்தின் பெயரை கெடுத்ததாக விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட யாரும் அவரை ஒதுக்கி வந்தார்கள்.
பிக்பாஸ் எண்ட்ரி:-
வாழ்க்கை முழுவதும் பிரச்சனையாக இருந்ததால் மகள்களுடன் யூடியூப் சேனல் ஆரம்பித்து பிஸியானார். இதன்பின் பிக்பாஸ் 3 சீசனில் பங்கு பெற்று சர்ச்சையிலும் சிக்கினார். லாக்டவுன் சமயத்தில் தனக்கு உதவிய பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அவரின் நடவடிக்கை சரியில்லை என்று சில மாதங்களிலேயே அவரை விட்டு பிரிந்துவிட்டார்.
மகள்களின் ஆதரவு:-
தற்போது யூடியூப் சேனல் ஆரம்பித்து வந்த வனிதா சமீபத்தில் நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்று வெறுப்பை சம்பாதித்து வந்தார். ஒருகட்டத்தில் வனிதாவின் மனநிலையில் பிரச்சனை ஏற்பட நிகழ்ச்சியை விட்டு வாக்கவுட்டாகினார்.
மதமாற்றம்:-
இந்து குடும்பத்தில் இருந்து வந்த வனிதா முதல் இரண்டு திருமணத்தையும் இந்துமுறைப்படி செய்தார். அதன்பின் பீட்டர் பாலுக்காக கிறித்துவமுறைப்படி திருமணம் செய்தார். தற்போது புத்த மதத்திற்கு மாறியுள்ளதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் வெளியேற காரணம்:-
சமீபத்தில் மூத்த நடிகர் தியாகராஜன் இயக்கும் அந்தகன் படத்தில் நடித்துள்ள வனிதா அவருடன் இணைந்து சமீபத்தில் பேட்டியொன்றில் கலந்து கொண்டுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை, பிக்பாஸ் அல்டிமேட் குறித்து உரையாடிய வனிதா அதில் இருந்து வாக்கவுட் ஆனதற்கு என்ன காரணம் என்று கூறியுள்ளார்.
தனிப்பட்ட விஷயமாக வெளியே செல்லவில்லை. நான் வெற்றி பெற நிகழ்ச்சிக்கு போகவில்லை. நான் ஒரு எண்டர்டைனர் தான். அங்கு எனக்கான விளையாட்டு இடமில்லை. நான் வாக்கவுட் ஆகவில்லை. நான் தேவை என்பதால் என்னை கூப்பிட்டார்கள் நானும் பணத்தை சம்பாதிக்க சென்றேன்.
இன்னும் சில நாட்கள் இருந்து சம்பாதிட்டு வெளியேறி இருக்கலாம் என கூறியுள்ளார். என் பேர் முற்றிலுமாக ரிப்பாராக போகிறது என்று நினைத்து தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினேன் என்றும் தெரிவித்துள்ளார் வனிதா.
ஆர்யாவின் முன்னாள் காதலியா இது! இறுக்கமான ஆடையில் இப்படி இருக்காங்களே