கண்ட்ரோல் பண்ணுங்கன்னு அப்பா சொல்லுவார்? வரலட்சுமி கணவரை எச்சரித்த சரத்குமார்..
வரலட்சுமி
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தில் சிம்பிவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
பாய்ஸ், 7ஜி ரெயின்போ காலனி, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களின் வாய்ப்பு வந்தும் அம்மா, அப்பா சம்மதத்துக்காக காத்திருந்தார். அதன்பின் தான் போடா போடி படத்தில் நடிக்க ஆரம்பித்த வரலட்சுமி, அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகையாகினார்.

தமிழை தாண்டி தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிப்படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, வில்லியாகவும் நடித்து மிரட்டி வருகிறார். கடந்த 2024ல் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வரலட்சுமி.
சட்டமும் நீதியும் 2 படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

எச்சரித்த சரத்குமார்
சமீபத்தில் வரலட்சுமி அளித்த பேட்டியொன்றில், என்னுடைய அப்பா என்னிடம் எப்போதும் "பஞ்சாயத்தில் மாட்டாமல் இருந்தால் சரி..ம்மா" என்று சொல்வார். அதேசமயம் ஏதாவது பிரச்சனை என்று வந்துவிட்டால் அவர்தான் முதலில் என்னை அதில் இருந்து வெளியே கொண்டு வருவார்.
என் கணவரிடம், வரலட்சுமிதான் அதிகம் சண்டை போடுவா, நீங்கள் சண்டை போடமாட்டீங்க, கண்ட்ரோல் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார் என்று வரலட்சுமி பகிர்ந்துள்ளார்.