குழந்தை பெத்துக்க ஆசைப்பட்டா மட்டும் போதாது..நடிகை வரலட்சுமி சரத்குமார்...

Varalaxmi Sarathkumar Tamil Actress
By Jai Sep 19, 2026 06:15 AM GMT
Report

வரலட்சுமி

சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி, நிக்கோலை சச்தேவ் என்பவரை கடந்த 2024ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் வரலட்சுமி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்.

குழந்தை பெத்துக்க ஆசைப்பட்டா மட்டும் போதாது..நடிகை வரலட்சுமி சரத்குமார்... | Varalaxmi Sarathkumar About Get Baby After Marry

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து பேசியுள்ளார். அதில், குழந்தை பெற்றுக்கொள்வது ஒவ்வொரு தம்பதியினருக்கும் அவரவர் விருப்பம்.

ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈசியாக கேட்கலாம். பெற்றுக் கொள்வது சரிதான், ஆனால் அதை வளர்ப்பது மிகப்பெரிய பொறுப்பு.

குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் வளர்க்கும் பொறுப்பை ஏற்க மனதளவில் தயாராக இருக்கிறோமா என்று யோசிக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.