வாய்ப்பு கிடைக்காததால் சரத்குமார் மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு!
நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். அவர் விஜய்க்கு வில்லியாக சர்க்கார் படத்தில் கூட நடித்து இருந்தார். இருப்பினும் அவருக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. அதனால் அவர் சில வருடங்களுக்கு முன்பு பேக்கரி தொழிலில் கூட இறங்கினார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது தனது வெளிநாட்டு ட்ரிப், உடற்பயிற்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வரு போட்டிருக்கும் போஸ்ட் அனைவருக்கும் பெரிய ஷாக் கொடுத்து இருக்கிறது.
அவர் சென்னையை காலி செய்து ஹைதராபாத்தில் குடியேற போகிறாராம். அதற்கான காரணம் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் தான் வரலக்ஷ்மி இப்படி ஒரு முடிவு எடுத்தாரா என கேள்வி எழுந்திருக்கிறது.
இனி தெலுங்கு சினிமாவில் அவர் கவனம் செலுத்த போகிறார் என தெரிகிறது. அங்கு செட்டில் ஆனாலும் குடும்பத்தை பார்ப்பதற்காக வரலக்ஷ்மி அடிக்கடி சென்னை வந்து செல்வாராம்.