தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட விஜய்! ஃபிளாப் வேணுமா ஃபிளாப் இருக்கு

Vijay Dil Raju Vamshi Paidipally
By Karthick Raja Jan 11, 2023 04:30 AM GMT
Report
110 Shares

விஜய் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் அருமையாக வந்துள்ளது, சண்டை வேண்டுமா சண்டை இருக்கு, எமோஷன் வேண்டுமா எமோஷன் இருக்கு ரசிகர்களுக்கு என்ன வேண்டுமோ அது அனைத்தும் படத்தில் இருக்கிறது என்று தயாரிப்பாளர் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.

அவர் கூறியது போல் எல்லாமே இருக்கு, ஆனால், நல்லாவா இருக்கு என்று கேட்டால் அது கேள்வி குறி தான். ஆம், அதிகாலை 4 மணிக்கு தூக்கத்தை விட்டுவிட்டு, விஜய்யின் வாரிசு படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு தாலாட்டுப்பாடி திரையரங்கில் அனைவரையும் தூங்க வைத்துள்ளார் வம்சி. ஏற்கனவே பல இயக்குனர்கள் பயன்படுத்திய அதே கதையை வைத்து கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து எடுத்துள்ளார் வம்சி.

ஹீரோ விஜய் படத்தை காப்பாற்ற நினைத்தாலும், ஹீரோயின் ராஷ்மிகா அதற்க்கு தடையாக நிற்கிறார். விஜய்யுடன் ராஷ்மிகாவிற்கும் இருக்கும் காட்சிகள் பல செம கிரிங்-ஆக அமைந்துள்ளது. யோகி பாபு, சரத்குமார், ஜெயசுதா ஒரு பக்கம் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்க மறுபக்கம் பிரகாஷ் ராஜை வில்லன் என்று கூறி டம்மி ஆக்கிவிட்டார் வம்சி.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இருந்தாலும் திரைக்கதையில் சற்று சொதப்பியுள்ளார். மொத்தத்தில் தில்லாக பேசிய தில் ராஜுவின் தலையில் துண்டு விழுவது போல் அமைந்துள்ளது முதல் நாள் விமர்சனம். தில் ராஜு ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் 'ஃபிளாப் வேணுமா ஃபிளாப் இருக்கு'.