வாரிசு 300 கோடி வசூல், உருட்டா? விஜயை தாக்கிய ப்ளூ சட்டை மாறன்

Vijay Dil Raju Varisu Blue Sattai Maran
By Dhiviyarajan 1 மாதம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

வாரிசு

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த மாதம் 11- ம் தேதி வாரிசு திரைப்படம் வெளியானது நாம் அறிந்ததே. இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இப்படத்தில் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், பிரகாஷ் ராஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வாரிசு திரைப்படம் வெளியாகி 7 நாட்களிலேயே 250 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் இது பொய்யான தகவல் என்று சிலர் இணையத்தில் கூறி வந்தனர்.

வாரிசு 300 கோடி வசூல், உருட்டா? விஜயை தாக்கிய ப்ளூ சட்டை மாறன் | Varisu Movie Box Office Is Fake

ப்ளூ சட்டை vs விஜய்

சமீபத்தில் வாரிசு திரைப்படம் உலகமெங்கும் 300 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவரின் ட்விட்டர் பக்கத்தில், " 300 கோடி. உலக மகா உருட்டு" என்று விஜய்யின் வாரிசு படத்தை மறைமுகமா தாக்கியுள்ளார்.