விஜய்யின் ஜனநாயகன் படம் எப்படி இருக்கு!! பார்த்தவர்கள் சொல்வது இதுதான்..
ஜனநாயகன்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். வருகிற 9ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதற்கிடையில் படத்தின் சென்சார் சான்றிதழ் வராததால் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்ககோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதன்பின் பட ரிலீஸை ஏன் 10 ஆம் தேதிக்கு தள்ளிப்போடக்கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே என்று சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியதோடு வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தது.
படம் எப்படி இருக்கு
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் படம் எப்படி வந்துள்ளது என்று கூறியிருக்கிறார்.
அதில், சிலர் இப்படத்தை பார்த்திருக்கிறார்கள், அவர்களிடம் நான் பேசிவிட்டேன். பகவந்த் கேசரி படத்தில் இருந்து கொஞ்ச போர்ஷன் தான் வைத்திருக்கிறார்கள். மற்றதெல்லாம், எச் வினோத் மாற்றியிருக்கிறார்.
ஹாலிவுட் ரேஞ்சிற்கு படத்தை எடுத்துள்ளார். 3 மணிநேர படத்தை ஒரு நிமிடம் கூட நகரமுடியவில்லை, அப்படி படம் விறுவிறுப்பாக போகிறது, விஜய்யின் திரை வாழ்க்கையில் சிறந்த படம் இதுதான். அப்படி படத்தை எடுத்து வைத்திருக்கிறார் எச் வினோத் என்று படத்தை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.