சம்பாரிச்சது எல்லாமே இப்படி கரியாக்குரானுங்களே! வேலுமணி தொண்டர்கள்..

corruption raid spvelumani
By Edward Mar 15, 2022 08:30 AM GMT
Report

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சில மாதங்களாசோதனை செய்து வருகிறார்கள். சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்களின் வீட்டில் சோதனை நடந்து.

தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். வேலுமணி உள்ளிட்ட 58 இடங்களில் சோதனை நடத்தியதில் வருமானத்திற்கு அதிகமாக 58.23 கோடி கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

வருமானத்தை விட 3928% கூடுதல் சொத்து வைத்திருக்கிறார் வேலுமணி. அவர் விட்டில் அதிமுகவை சேர்ந்த வேலுமணியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொண்டர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைவைத்து பலர் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

மேலும் கோவையில் நடைபெற்ற ஒரு திருவிழாவில் எஸ்பி வேலுமணி நடனம் போட்ட வீடியோவும் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.