ஆடியோ லான்சுக்கு வராதா உனக்கு!! கலாய்த்தவருக்கு திரிஷா கொடுத்த பதிலடி..

Suriya Trisha RJ Balaji Karuppu
By Jai May 02, 2026 05:30 AM GMT
Report

திரிஷா - கருப்பு

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படம் வரும் மே 14 திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மதுரையில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. சூர்யா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் திரிஷா ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

ஆடியோ லான்சுக்கு வராதா உனக்கு!! கலாய்த்தவருக்கு திரிஷா கொடுத்த பதிலடி.. | Ven I Forgot Actress Trisha Krishnan S Cute Reply

இந்நிலையில் கருப்பு படத்தின் திரிஷாவின் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாக படக்குழுவினர் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். அந்த வீடியோ ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, அடக்கடவுளே இதில் திரிஷா இருப்பதையே மறந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு திரிஷா, நானும் கூட மறந்துவிட்டேன், இப்போதாவது அவர்கள்(படக்குழு) நினைவூட்டியது நல்லது, நன்றி என்று பதிவிட்டார்.

ஆடியோ லான்சுக்கு வராதா உனக்கு!! கலாய்த்தவருக்கு திரிஷா கொடுத்த பதிலடி.. | Ven I Forgot Actress Trisha Krishnan S Cute Reply

ஆடியோ லான்சுக்கு வராதா உனக்கு

அதே பதிவில் மற்றொரு ரசிகர், ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வராதது குறித்து கிண்டலாக, ஆடியோ லான்சுக்கு வராதா உனக்கு இந்த நக்கலாம் தேவையா என்று கிண்டலடித்து கருத்தை கூறியிருக்கிறார். அதற்கு திரிஷா, எனக்கான அழைப்பிதழ் தபாலில்(Mail) தொலைந்துவிட்டது போல என்று பதிவிட்டார். இதிலிருந்து திரிஷாவுக்கு படக்குழுவினருக்கும் இடையே பிரச்சனை இருக்குமோ என்ற கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Gallery