பிரபல இயக்குனர் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட லோகேஷ் கனகராஜ்? இதுதான் காரணம்!!
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு பெற்று 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை படைத்து வரும் படம் விக்ரம்.
அனிருத் இயக்கத்தில் ராஜ் கமல் பிலீம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். மல்டிவெர்ஷன் அடைப்படையில் கதையை உருவாக்கி வரும் லோகேஷ் கனகராஜ் மூன்று ஆண்டுகளாக இப்படத்தில் உழைத்து எங்கும் சிதராமல் கதையை எடுத்து அனைவரது பாரட்டையும் பெற்று வருகிறார்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் வெங்கட் பிரபு கமல் ஹாசனை வைத்து எடுக்க வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய், அஜித்தை ஒன்றாக ஒரே படத்தில் என் மகன் எடுக்க வேலைகளை செய்து வருவதாக கங்கை அமரன் கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களுக்கு கதையை கூறவும் தயாராக இருக்கிறேன் என்றும் வெங்கட் பிரபு கூறியிருந்தார். தற்போது நடிகை சமந்தாவின் மாஜி கணவர் நடிகர் நக சைதன்யாவை வைத்து ஒரு தெலுங்கு படத்தினை இயக்க ஆரம்பித்திருக்கிறார் வெங்கட் பிரபு.
I wanted to make #Vikram2 ... Old Video Of #VenkatPrabhu @vp_offl ennana miss panniteengale.... pic.twitter.com/juohFcfUQr
— chettyrajubhai (@chettyrajubhai) June 25, 2022