சங்கீதாவை அடிபாவி சண்டாளின்னு நிகழ்ச்சியில் திட்டிய வெங்கட் பிரபு.. எதற்கு தெரியுமா?

Vijay Sangeetha Zee Tamil Venkat Prabhu Greatest of All Time
By Edward Sep 11, 2024 09:00 AM GMT
Report

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரசாந்த், மோகன், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி 300 கோடிக்கும் வசூலித்து சாதனை படைத்து வருகிறது கோட் படம்.

இப்படத்தின் பிரமோஷனில் படக்குழுவினருடன் வெங்கட் பிரபு ஜீ தொலைக்காட்சியில் நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

சங்கீதாவை அடிபாவி சண்டாளின்னு நிகழ்ச்சியில் திட்டிய வெங்கட் பிரபு.. எதற்கு தெரியுமா? | Venkat Prabhu Sangeetha Video Viral Goat Promotion

அதில், தலையா? தளபதியா என்று நடிகை சங்கீதா வெங்கட் பிரபுவிடம் கேட்டிருக்கிறார். உடனே அவர், அடிப்பாவி சண்டாளி, இதை சொல்லவே முடியாதே, எப்படி சொல்லமுடியும். அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா என்று கேட்பது போல் இருக்கிறது.

எனக்கு இருவரையும் பிடிக்கும், நான் எப்படி இருவரிடமும் வேலை செய்தபோது இருவரையும் வைத்து ஒரு படத்தில் நடிக்க வைக்க நினைத்தேன் என்பது இருவருக்குமே தெரியும். ஆனால் அது எப்படி நடக்கும் என்பது தெரியாது என்று தெரிவித்துள்ளார். இதற்கு சங்கீதா கண்டிப்பாக நடக்கும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.