விஜய்க்கே சாப்பாடு போட்டா அஜித்! நடிப்பை விட இதுல தான் கில்லாடியாம்!
தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்தவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன். அவர்களுக்கு அடுத்து ரசிகர்கள் பெரியளவில் கொண்டாடப்படும் நடிகர்களாக அஜித் - விஜய் இருந்து வருகிறார்கள்.
இருவரின் ரசிகர்கள் என்னதான் இணையத்தில் சண்டைகள் போட்டுக்கொண்டாலும் அஜித் - விஜய் நண்பர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு சித்ரா லட்சுமனன் பேட்டியில், இருவரையும் சந்தித்ததை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
மங்காத்தா - வேலாயுதம் படத்தின் படப்பிடிப்புகள் ஒரே இடத்தில் நடந்தபோது அஜித் சார் என்னை ஒரு கேள்வி கேட்டார். தம்பியை சந்திக்கவில்லையா என்று விஜய்யை பற்றி கூறினார். உடனே என்னை அழைத்து கொண்டு கேரவனில் இருந்த விஜய்யிடம் கூட்டிச் சென்றார்.
அங்கு என்னிடம் சகஜமாக பேசிய இருவரும், எங்களை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். அதில் வில்லன் யார் என்று இருவரும் ஆர்வத்துடன் யோசனைகளை கூறினார்கள்.
அதன்பின் அடுத்த நாள் படப்பிடிப்பின் போது அஜித் சார் மதிய உணவிற்கு இரு யூனிட்டிற்கும் பிரியாணி செய்து கொடுத்தார். பிரியாணி நன்றாக செய்து கொடுத்ததற்காக விஜய் அஜித்திற்கு வாட்ச் வாங்கி மாட்டிவிட்டார்.
அப்படி அஜித் சார் பிரியாணி செய்ய மிகவும் பிடிக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் வெங்கட் பிரபு.