இதுகெல்லாம் போய் சீரியஸா ரிப்ளை பண்ணாதீங்க!! வெங்கட் பிரபு விவகாரம்.. சிவகார்த்திகேயன் பதில்...

Sivakarthikeyan Gangai Amaren Venkat Prabhu Gossip Today
By Jai Sep 29, 2026 02:15 PM GMT
Report

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு

சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது சேயோன் படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. அதை தொடர்ந்து பார்கிங் பட இயக்குனருடன் சிவகார்த்திகேயன் கைகோர்த்துள்ளார்.

இதுகெல்லாம் போய் சீரியஸா ரிப்ளை பண்ணாதீங்க!! வெங்கட் பிரபு விவகாரம்.. சிவகார்த்திகேயன் பதில்... | Venkat Prabhu Sivakarthikeyan Controversy Stoped

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து சத்ய ஜோதி நிறுவனத்துகாக தான் படம் நடிக்கவிருந்தார். ஆனால், சிவகார்த்திகேயன் தனக்கு ரூ. 60 கோடி சம்பளம் கேட்க, அதற்கு சத்யஜோதி மறுத்ததாகவும், அதனால் தான் வெங்கட்பிரபு படம் தள்ளி போனதாக பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் பேசியுள்ளார்.

அதில், வெங்கட் பிரபுவுக்கு முதலில் கால்ஷீட் கொடுத்த அந்த நடிகர், படம் ஹிட்டானப்பின், அதே இயக்குநருடன் 2 படத்தில் பணியாற்றிவிட்டுதான் வருவேன் என்று சொல்லிவிட்டதாக பெயரை குறிப்பிடாமல் பேசியுள்ளார். இந்த விவகாரம் தீயாக பரவிய நிலையில் வெங்கட் புரபு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதுகெல்லாம் போய் சீரியஸா ரிப்ளை பண்ணாதீங்க!! வெங்கட் பிரபு விவகாரம்.. சிவகார்த்திகேயன் பதில்... | Venkat Prabhu Sivakarthikeyan Controversy Stoped

இதுகெல்லாம் போய்

அதில் SK எனக்கு எப்போதும் ஒரு நெருங்கிய நண்பர். தங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை, தன்னுடைய சொந்த மகனின் படம் தாமதமாகும் போது ஒரு தந்தைக்கு ஏற்படும் விரக்தி இயல்பானதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபுவின் இந்த பதிலுக்கு சிவகார்த்திகேயன் பதில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். நாம் ஒரு குடும்பம் மாதிரி. இதற்கெல்லாம் ரொம்ப சீரியஸா ரிப்ளை பண்ண வேண்டாம். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.