தல அஜித் நீங்கள் இதை செய்தால் போதும்! நடிகர் விவேக்கின் கடைசி கோரிக்கை இது தானாம்!

death vivek அஜித் ajithkumar tamil cinema
By Edward Apr 17, 2021 10:12 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியில் ஏற்படுத்திய தருணம் ஏப்ரல் 17. கொரானா தடுப்பூசி போட்டு ஒரு நாட்களில் நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதித்து இன்று காலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

அவர் இறப்பால பல ரசிகர்கள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும் நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள். மேலும் அவர் பேசிய சில பேட்டிகளையும் நிகழ்ச்சி தொகுப்புகளையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். மறைவுக்கு முன் சில படங்களில் நடித்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வந்தார் நடிகர் விவேக்.

இந்நிலையில், தாராள பிரபு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவேக்கிடம் ரசிகர் ஒருவர் பெரிய பிரபலம் ஒருவருக்கு சவால்விட வேண்டுமேயானால் யாருக்கு கொடுப்பீர்கள் என கேட்டுள்ளார்? அவர் கூறியதாவது, தல அஜித் தன்னுடைய ரசிகர்கள் ஒவ்வொருவரையும் ஒரு மரம் நட சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த சவால். இதனை அஜித் தன் வாயால் கூறவில்லை என்றாலும் வழக்கம்போல் அறிக்கை விடுவதை போல் வெளியிட்டாலே போதும்.

தல அஜீத்துக்காக தன் உயிரையே கொடுக்கும் ரசிகர்கள் மரம் நட மாட்டார்களா, பொறுத்திருந்து பாருங்கள். தல ரசிகர்களின் ஆட்டத்தை என்று கூறினார். நடிகர் அஜித்திற்கு சின்ன கலைவாணர் விவேக் விட்ட வேண்டுகோளை தல ஏற்று செய்தால் நன்றாக இருக்கும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இன்று மரணம் அடைந்த விவேக் வேண்டுகோளை நிறைவேற்றி அஜித் மனதளவில் அவருக்கு ஆத்ம திருப்தி கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்து கருத்துகளை வெளியிட்டும் வருகிறார்கள்.