நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் 94 வயதில் காலமானார்..

Sowcar Janaki Death Tamil Actress Actress
By Jai Aug 21, 2026 09:30 AM GMT
Report

சௌகார் ஜானகி

தென்னிந்திய சினிமாவில் 1950களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை சௌகார் ஜானகி. 400 படங்களுக்கு மேலும், 500க்கும் மேற்பட்ட மேடைநாடகங்களிலும் நடித்து பிரபலமானார் ஜானகி. கடந்த 2022 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதினை வழங்கியது.

நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் 94 வயதில் காலமானார்.. | Veteran Actress Sowcar Janaki Passes Away At 94

இந்நிலையில் 94 வயதாகும் செளகார் ஜானகி அம்மா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் தரப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.

நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் 94 வயதில் காலமானார்.. | Veteran Actress Sowcar Janaki Passes Away At 94

அவரின் இறப்பிற்கு பல தரப்பில் இருந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.