நடிகரின் கார் மோதி வெற்றிமாறன் உதவி இயக்குநர் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்!

Vetrimaaran Tamil Directors
By Dhiviyarajan Jun 10, 2023 04:30 PM GMT
Report

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன், வடசென்னை படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் தான் சரண் ராஜ். இவர் துணை நடிகராகவும் படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகரின் கார் மோதி வெற்றிமாறன் உதவி இயக்குநர் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்! | Vetrimaaran Assistant Director Passed Away

இந்நிலையில் சரண் ராஜ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது கார் ஒன்று அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் சம்பவம் இடத்தில் சரண் ராஜ் மரணம் அடைந்தார்.

அந்த காரை ஓட்டி வந்த பழனியப்பன் என்பவரும் துணை நடிகர் தானாம். பழனியப்பன் குடிபோதையில் வண்டியை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தினார் என்று விசாரணையில் தெரியவந்தது.