வெச்சது ஆப்பு தான் என்று தெரியாமல் விழுந்துவிழுந்து பாராட்டிய உதயநிதி!! விடுதலை கொடுத்த வெற்றிமாறன்..
முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து கடந்த மூன்று வருடங்களாக விடுதலை படத்தினை இயக்கி வந்தார். இன்று மார்ச் 31 ஆம் தேதி விடுதலை படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதோடு பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
தவறு செய்யும் போலிஸ்காரர்களின் செயல்களை மையப்படுத்தி எடுத்துள்ள இப்படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. ரிலீஸ்-க்கு முன் வெற்றிமாறன் உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டுக்காமித்திருக்கிறார்.

படம் பார்த்துவிட்டு எப்போதும் இல்லாத அளவிற்கு வெற்றிமாறனை பாராட்டி தள்ளி இருக்கிறார். போலிஸ்கார்களின் செய்யும் மோசமான வேலைகளை அப்படியே தோலுரித்துக்காட்டிய வெற்றிமாறனை உதயநிதி பாராட்டியது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
கதையை முழுமையாக அறிந்து தான் இப்படி பாராட்டினாரா? இல்லை தனக்கு சைலெண்ட்டாக வைத்த ஆப்பை தெரிந்தும் காட்டிக்கொள்ளாமல் மறந்துவிட்டாரா என்று சினிமா விமர்சகர்கள் ஷாக்காகியிருந்தார்களாம்.
இதற்கு காரணம் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் வேலை செய்யவிருப்பதால் தான் எதுவும் கூறாமல் சென்றார்கள் என்றும் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் ரெட் ஜெயண்ட் மீவிஸ்-க்கு மிகப்பெரிய லாபத்தையும் கொடுக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.