பிக்பாஸ் தொகுப்பாளரான விஜய் சேதுபதி!! மெண்டல் ஹெல்த் பார்க்க சொன்ன நடிகை..

Kamal Haasan Vijay Sethupathi Bigg Boss Star Vijay Vichithra
By Edward Sep 13, 2024 06:15 PM GMT
Edward

Edward

Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

பிக்பாஸ் தொகுப்பாளரான விஜய் சேதுபதி!! மெண்டல் ஹெல்த் பார்க்க சொன்ன நடிகை.. | Vichitra Advice Bigg Boss 8 Host Vijay Sethupathi

உலக நாயகன் கமல் ஹாசன், தான் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் இருந்து விலகியதாக அறிவித்தார். அவருக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று பிரமோ வீடியோவையும் வெளியிட்டது விஜய் டிவி.

இந்நிலையில், நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான விசித்ரா அளித்த பேட்டியொன்றில் சில கருத்துக்களை விஜய் சேதுபதிக்கு அட்வைஸாக கூறியிருக்கிறார். விஜய் சேதுபதி மிகச் சரியான தொகுப்பாளராக பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை நடத்துவார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

பிக்பாஸ் தொகுப்பாளரான விஜய் சேதுபதி!! மெண்டல் ஹெல்த் பார்க்க சொன்ன நடிகை.. | Vichitra Advice Bigg Boss 8 Host Vijay Sethupathi

இந்த சீசனில்தான் கலந்து கொள்ள ஆசை என்றும் அவருடன் நடிக்க முடியவில்லை அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் அது தனக்கு மிகவும் உற்சாகமான மனநிலையை கொடுக்கும் என்று விசித்ரா கூறியிருக்கிறார்.

சீனியர் நடிகரான கமல் ஹாசனுக்கே பல ட்ரோல்கள் மீம்ஸ்கள் கடந்த சீசனில் ஏற்பட்ட நிலையில் விஜய் சேதுபதி அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் தன்னுடைய மெண்டல் ஹெல்த்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் தனக்கென ஒரு குழுவை அமைத்துக்கொண்டு அவர்களின் ஆலோசனைப்படி செயல்படலாம் என்றும் கூறியிருக்கிறார் நடிகை விசித்ரா.