நடிகை விசித்ராவின் சினிமா வாழ்க்கை நாசமானது இந்த நடிகரால் தான் காரணம்.. அவரே போட்ட ஒரு பதிவு..

Sathyaraj Bigg Boss Tamil Actress Vichithra
By Edward Dec 24, 2023 07:45 AM GMT
Report

சினிமாவில் கதாநாயகிகளாக நடிக்க திறமை மற்றும் அழகு இருந்தால் கூட, பலரால் சினிமாவில் சாதிக்க முடியாமல் போயுள்ளது. ஆனால் சிலருக்கு முதல் படம் ஹிட்டாகி வரவேற்பை கொடுக்கும், சிலருக்கு படங்களே அமையாமல் இருக்கும். அப்படி திறமை இருந்தும் சரியான சினிமா வாய்ப்பினை பெறாமல் இருந்தவர்களில் ஒருவர் நடிகை விசித்ரா.

தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 80 நாட்களுக்கு பிறகு போட்டிபோட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன் ஒரு நடிகரால் தான், சினிமாவில் இருந்து விலக காரணம் என்றும் அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

நடிகை விசித்ராவின் சினிமா வாழ்க்கை நாசமானது இந்த நடிகரால் தான் காரணம்.. அவரே போட்ட ஒரு பதிவு.. | Vichitra Reply To A Tweet That Degrades Sathiyara

தற்போது கவர்ச்சி நடிகை என்ற ஒரு பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதற்கு முன் விசித்ரா பேசிய அந்த நடிகரின் விசயம் பேசுபொருளாக மாறியதை அடுத்து மற்றொரு தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

2019ல் ஒரு ஊடக எக்ஸ் தள பக்கத்தில், தமிழில் முன்னணி நடிகையாக வந்திருக்க வேண்டியது விசித்ரா. ஆனால் சத்யராஜ் மாமாவால் அது போயிடுச்சு என்று குறிப்பிட்டு ஒரு பதிவினை போட்டிருந்தனர்.

அட்ஜஸ்ட்மென்ட் செய்து பணக்காரனா ஆனாங்க, நயன்தாரா வளர்ச்சி காரணம் இதுதான்.. பிரபல நடிகர் வெளிப்படை

அட்ஜஸ்ட்மென்ட் செய்து பணக்காரனா ஆனாங்க, நயன்தாரா வளர்ச்சி காரணம் இதுதான்.. பிரபல நடிகர் வெளிப்படை

இதனை அறிந்த விசித்ரா, சத்யராஜ் சார் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்றும் அவர் இயக்கிய முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல ரோல் கொடுத்து இருந்தார் என்றும் பதிவு செய்தார்.

மேலும் அந்த காலக்கட்டத்தில் தனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரம் வந்ததால், நல்ல கதாபாத்திரங்கள் என்னால் நடிக்க முடியாமல் போனதாகவும் அந்த பதிவில் கூறியிருந்தார்.

Gallery