விடாமுயற்சி படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளாதா.. முழு விவரம் இதோ

Ajith Kumar VidaaMuyarchi Box office
By Kathick Feb 13, 2025 10:30 AM GMT
Report

விடாமுயற்சி படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளாதா.. முழு விவரம் இதோநடிகர் அஜித் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர்.

இவர் நடிப்பில் துணிவு படத்திற்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது.

விடாமுயற்சி படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளாதா.. முழு விவரம் இதோ | Vidaamuyarchi Box Office Collection

மேலும் என்னை அறிந்தால் படத்திற்கு பின் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் இப்படத்தின் மீது கலவையான விமர்சனங்களை கூறி வந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

விடாமுயற்சி படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளாதா.. முழு விவரம் இதோ | Vidaamuyarchi Box Office Collection

இந்த நிலையில், 7 நாட்களை விடாமுயற்சி படம் கடந்துள்ள நிலையில், உலகளவிலும் தமிழகத்திலும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 140 கோடி வசூலையும், தமிழகத்தில் ரூ. 84 கோடி வசூலையும் ஈட்டியுள்ளது.