விடாமுயற்சி டிரைலர் : விவாகரத்து பற்றி அஜித் பேசியதை கவனிச்சீங்களா?
விடாமுயற்சி டிரைலர்
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கிறார். வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி விடாமுயற்சி படம் தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மாலை 6.40க்கு படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியிடப்பட்டது.
டிலைலர் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் விவாகரத்து குறித்து அஜித், டிரைலரில் பேசிய ஒரு டயலாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரிஷாவிடம், எனக்கு இந்த ஜெனரேஷன் பற்றி தெரியாது கயல், ஆனா நாங்க சின்ன புள்ளையா இருக்கும்போது வாட்ச் கெட்டுப்போச்சுனா ரிப்பேர் பண்ணுவோம், டிவி கெட்டுப்போச்சுனா ரிப்பேர் பண்ணுவோம், தூக்கி போடமாட்டோம் என்ற டயலாக் அஜித் பேசி இருக்கிறார். அஜித் தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு அறிவுரையை எப்போதும் கூறுவார்.
விவாகரத்து
அப்படி, குடும்ப வாழ்க்கையோடும் காதல் வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கும்போது கச்சிதமாக இந்த டயலாக் பொறுந்துகிறது. அதாவது கணவன் - மனைவிக்குள் எதாவது பிரச்சனை என்றால் அதனை பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும், அதைவிட்டுவிட்டு விவாகரத்து என்று எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கக்கூடாது என்று மறைமுகமாக அஜித் கூறியிருக்கிறார். சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் இடையே விவாகரத்து அதிகரித்து வருவதை கண்டித்து பேசியிருக்கலாம் என்று சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.