நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட கமல் மகளின் வீடியோ! அட இந்த நடிகையும் இந்த கோஷ்டியா?

kamal Akshara mnm suhasini
By Kanagasooriyam Apr 05, 2021 06:05 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதால், 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்கு இன்று (04 ஏப்ரல்) 7 மணியுடன் முடிவடைகிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர்.

அந்தவகையில் கமல் ஹாசனும் மக்கள் நீதி மன்றம் சார்பில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுவதால் அப்பகுதியில் அவருக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். தன் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் தந்தையுடன் வேனில் சென்ற புகைப்படம் வெளியானது.

இந்நிலையில் கடைசி நாளான இன்று நடிகை அக்‌ஷரா ஹாசன் தன் உறவினரும் நடிகையுமான சுஹாசினி ஹாசனுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்த இடத்தின் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.