கணவரை விட்டு பிரிந்த ஜீ தமிழ் அயலி சீரியல் நடிகை வித்யா
Serials
Tamil TV Serials
By Karthick Raja
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அயலி. இந்த சீரியலில் இந்திராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வித்யா.

இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் வினு மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், தற்போது நடிகை வித்யா மற்றும் வினு மோகன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வினு மோகன் தனது இன்ஸ்டாகிராமில் வித்யாவின் அனைத்து போட்டோக்களையும் நீக்கிவிட்டார். அவர்கள் விவாகரத்து செய்வதாக மலையாள ஊடகங்களில் செய்தி உலா வருகிறது.

இவர்களுடைய விவாகரத்து செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது பற்றி இருவரும் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.