ஆசைக்காட்டி நடுரோட்டில் விட்ட இயக்குனர்! புலம்பும் காமெடி நடிகர் சூரி..

suriya soori vetrimaran vaadivasal viduthalai
By Edward Mar 21, 2022 04:36 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறி பரோட்டா சூரி என்ற பெயரோடு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகினார்.

விஜய், அஜித், விஷால், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் லீட் காமெடி நடிகனாக நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். காமெடியனாக இருக்கும் சூரியை கதாநாயகனாக வைத்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை என்ற படத்தினை இயக்க முடிவெடுத்தார்.

பூஜை போட்டு அதற்காக சூரி சிக்ஸ்பேக்கெல்லாம் வைத்து ரெடியாகினார். இந்நிலையில் சூரி படத்தினை விட்டுவிட்டு வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கு ரூட்டை மாற்றியுள்ளார். சென்னை ECR பகுதியில் இதற்கான ரெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது.

சூர்யா, வெற்றிமாறன் பல மாடுபிடி வீரர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியது. ஒரு பக்கம் விடுதலை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி வேற படங்களில் ரொம்ப பிசியாக இருக்கிறார்.

இதனால் விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைக்காததால் படத்தை முடித்துக் கொடுக்க முடியவில்லை. இதனால் சூரி தான் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். அந்த மனிதன் காமெடி செமையா பண்ணிக்கொண்டு இருந்தார். அவரையும் ஹீரோ ஆசை காட்டி மாட்டிவிட்டுள்ளனர். விடுதலை படம் வெளியான பிறகுதான் சூரிக்கு இப்படம் கை கொடுக்கிறதா என்பதைப் பார்க்க முடியும்.