அந்த காட்சிக்கு 28 டேக்குகள், இப்போது நினைத்தால் கூட.. மனம் திறந்த வித்யா பாலன்
வித்யா பாலன்
கடந்த 2005-ம் ஆண்டு வெளியான 'பிரினீதா' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தென்னிந்திய நடிகையான வித்யா பாலன், தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார்.
இவர் தமிழில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓபன் டாக்
இந்நிலையில், தற்போது இவருக்கு நடிகை என்ற அடையாளத்தை கொடுத்த பிரினீதா திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பின் வரும் 29- ம் தேதி ரீ-ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் இது குறித்து வித்யா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " நான் பிரதீப் சர்க்காரிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொண்டேன். அவர் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கவனித்து, சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். ஒரு பாடலில் நான் அழ வேண்டும்.
அந்தப் பாடலில் ஒரு குறிப்பிட்ட வரியில் என் கண்ணீர் துளி விழ வேண்டும். இதற்காக 28 டேக்குகள் எடுக்கப்பட்டது. தேவைப்பட்டால், 100 டேக்குகள் கூட எடுப்பார். இப்போதும் இந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு சிரிப்பு வரும்" என்று தெரிவித்துள்ளார்.