இவங்க மட்டும் இல்லனா நயன்தாரா - விக்னேஷுக்கு கல்யாணமே இல்லை!! யார் தெரியுமா?

Nayanthara Vignesh Shivan Marriage
By Jai Jun 26, 2022 03:10 PM GMT
Report

நடிகை நயன்தாராவை கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தில் ஆரம்பித்த காதல், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முடிவில் திருமணமாக முடிந்துவிட்டது.

கடந்த ஆண்டே திட்டமிடப்பட்ட திருமணம் தள்ளிச்சென்று ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்று. மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தின் காட்சிப்படுத்தலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 25 கோடிக்கு வாங்கியிருந்தது.

அதற்காக அழைப்புவிடுக்கப்பட்ட நட்சத்திரங்கள் உறவினர்களுக்கு ஒரு கோர்ட் வேர்ட் கொடுக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் ஆன்மீகம், அம்மாவை சந்தித்தல் என்று சென்ற நயன் - விக்கி கடந்த வாரம் தாய்லாந்து, பேங்காக்கிற்கு ஹனிமூன் சென்றிருந்தனர்.

அதன் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் அவரது சமுகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இவர்கள் மட்டும் தான் திருமணத்தினை சிறப்பாக நடத்தி கொடுத்தனர் என்று அவர்களின் நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.

தற்போது அவர்களில் போட்டோகிராப்பர் ஜோசப் ரதிக் என்பவருக்கு பிறந்த நாள் வாழ்த்தினை கூறி ஒரு பதினை பதிவிட்டுள்ளார்.