லாஜிக்கே இல்லாம நீ ஏன் சம்பளத்த ஏத்துற? நயன் தாரா லெவலுக்கு பிளான் போட்ட காதல் இயக்குனர்..
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. ஐய்யா படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை நெற்றிக்கண் படம் வரை அவரது சினிமா வாழ்க்கையை முற்றிலுமாக பெரியளவில் மாற்றியிருக்கிறது.
அப்படி ஐய்யா, சந்திரமுகி, கஜினி போன்ற படங்கள் நயன் தாராவின் மார்க்கெட் தென்னிந்திய சினிமாவில் அதிகரிக்க காரணமாக இருந்தது. நடிப்பு தயாரிப்பு, அவுட்டிங் என பிஸியாக இருக்கும் நயன் தாரா தற்போது ஒரு படத்திற்காக ரூ. 4 கோடிக்கு மேல் சம்பளமாக பெற்று வருகிறார்.
இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு தன் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் ஏகே62 படத்தில் கமிட்டாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை மென்மேலும் அதிகரித்து வருகிறது. அப்படி அஜித் இப்படத்திற்காக 100 கோடி சம்பளம் கேட்டதற்கு லைக்கா நிறுவனம் 105 கோடி தானே முன்வந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நயன் தாரா மற்றும் அனிரூத் சம்பளமாக 5 கோடி பேசப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு 10 கோடி பேசியதாகவும் கூறப்படுகிறது.