அஜித்துக்கு கதை கொடுத்தீங்களா? AK62 டிராப்பாக இதான் காரணம்!! விக்னேஷ் சிவன்..
விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது தன் மனைவி நயன் தாரா மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் ரிலீஸாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் 50 கோடிக்கும் மேல் வசூலையும் ஈட்டி வருகிறது. படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில் அஜித்தின் 62வது படம் டிராப்பானது குறித்து பகிர்ந்துள்ளார்.
AK62 டிராப்பாக
அதில், 2018ல் LIC என்ற பெயரில் சிவகார்த்திகேயன் சாருடன் நடிக்க வேண்டியது, ஆனால் தயாரிப்பில் கதை பிரச்சனை ஏற்பட்டது. நான் கதையை மையப்படுத்தி எடுப்பவன், ஸ்டோரியை மாற்றமுடியாது. 6 மாதம் ஒரு கதையில் செலவு செய்வதற்கும் 4, 5 வருடம் ஒரு கதையில் செலவு செய்வதும் வித்தியாசம் இருக்கு. இதுவரை நான் எடுத்த படங்கள், குறைந்தபட்சம் 4 வருடம் வேலை பார்த்திருக்கிறேன்.
2012ல் போடா போடி படம் ரிலீஸான போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஸ்கிரிப்ட் என்னிடம் இருக்கு. அதன்பின் நானும் ரெளடி தான் படம் பண்ணுகிறேன். ஸ்கிரிப்ட்டில் மாற்றம் பண்ணி இருக்கிறேன், ஆனால் கதையில் மாற்றம் பண்ணியதில்லை. நானும் ரெளடி தான் படத்தின்போது என்னுடை கனவு அஜித் சாரிடம் படம் பண்ணுவதுதான். கிட்டத்தட்ட 3 முதல் 4 ஆண்டுகள் தேவை. கதையே இல்லாமல் படம் பண்ண முடியுமா? பண்ணவே முடியாது. எவ்வளவு பெரிய நடிகர், அவரிடம் அதை பண்ண முடியாது. தயாரிப்பாளரிடம் பட்ஜெட் பிரச்சனை வந்தது.

நிறைய படங்கள் டேக்-ஆஃப் ஆகும் முன் ட்ராப் ஆகும், அப்படியாகும் போது உண்மையான காரணம் தெரியாது. முடிந்துவிட்டதென்றால் முடிந்துவிட்டது. பட்ஜெட் பிரச்சனை, செக்ண்ட் ஆஃபில் சில பிரச்சனை அவ்வளவு தானே தவிர வேறேதும் இல்லை. நான் ஒரு ரசிகராக பார்க்கும் போது அஜித் சாரை இப்படி காட்ட வேண்டும் என்று நினைப்பேன், அதற்கு பட்ஜெட் வேண்டும். எனக்கு ஒரு நாளைக்கு என்னுடன் 2 ஆயிரம் பேர் இருக்கணும் என்று நினைப்பேன், ஆனால் தயாரிப்பாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி வராது, எல்லாருக்கும் அப்படியாகாது, எனக்கு தயாரிப்பாளரிடம் ஆகாது என்று விக்னேஷ் சிவன் ஓபனாக பேசியுள்ளார்.