கட்டாயப்படுத்திய தனுஷ்! இந்த விசயத்தை ஓப்பனாக உடைத்த விக்னேஷ் சிவன்

Dhanush
By Parthiban.A May 27, 2022 10:00 AM GMT
Report

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் உருகி உருகி காதலித்து வருகிறார்கள் என்பது உலகத்துக்கே தெரியும். அவர்கள் இருவருமே கெரியரில் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது திருமணம் செய்வதற்காக தயாராகிவருகின்றனர்.

நயன்தாரா தற்போது பல டாப் ஹீரோ படங்களை வைத்திருக்கிறார். மறுபுறம் விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

தற்போது விக்னேஷ் சிவன் முன்னணி இயக்குனராக இருந்தாலும் அவர் நடிகராக தான் முதலில் வந்திருந்தார். வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் உடன் அவர் நடித்து இருப்பார்.

கட்டாயப்படுத்திய தனுஷ்! இந்த விசயத்தை ஓப்பனாக உடைத்த விக்னேஷ் சிவன் | Vignesh Shivan Didnt Wanted To Act With Dhanush

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில் தான் தனுஷ் உடன் விருப்பம் இல்லாமல் தான் நடித்ததாக கூறி இருக்கிறார். ஷூட்டிங் நேரத்தில் ஒரு நபர் வரவில்லை என்பதால் அந்த இடத்தில் நான் நடிக்கவேண்டியதாகி விட்டது என தெரிவித்து உள்ளார்.

தனுஷ் உடன் நடித்ததை பற்றி இப்படி கூறி அசிங்கப்படுத்திவிட்டாரே என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.