திருமணத்திற்கு பின் விக்னேஷ் சிவன் பற்றி வெளியான தகவல்! ஆள் அடையாளமே தெரியாத புகைப்படம்

Nayanthara Vignesh Shivan
By Edward Jun 14, 2022 11:35 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவை காதலித்து 7 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

அறியப்பட்ட விக்னேஷ் சிவன்:-

நடிகர் சிம்புவை வைத்து 2012ல் வெளியான படத்தின் இயக்குனராக அறிமுகமாகியவர் விக்னேஷ் சிவன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருப்பார். இப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷின் விஐபி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விக்னேஷ் சிவன்.

இதன்பின் நனும் ரவுடி தான், தான சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை எடுத்தார். அதன்பின் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை தன் காதல் நயன் தாரா விஜய்சேதுபதி, சமந்தாவை வைத்து இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இப்படத்திற்கு பிறகு தான் திருமணம் என்ற முடிவில் இருந்த நயன் விக்கி ஜூன் 9ல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் விக்னேஷ் சிவன் பற்றி வெளியான தகவல்! ஆள் அடையாளமே தெரியாத புகைப்படம் | Vignesh Shivan First Movie As Actor Befor Vip

அறியப்பட்ட விக்னேஷ் சிவன்:-

இந்நிலையில் விக்னேஷ் விஐபி, போடா போடி படங்களுக்கு முன் ஏற்கனவே ஒரு படத்தில் உதவி இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருக்கிறார். 2007ல் இயக்குனர் கே ஆர் செந்தில் நாதன் இயக்கத்தில் வெளியான சிவி என்ற படத்தில் தான் விக்னேஷ் சிவன் அறிமுகமாகி இருக்கிறாராம். நயன் - விக்கி திருமணத்திற்கு பிறகு இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Gallery