நயன்தாரா வைத்திருந்த ரகசிய காதல்!! நடிகையிடம் உண்மையை உடைத்த விக்னேஷ் சிவன்

Nayanthara Suhasini Vignesh Shivan
By Edward Apr 14, 2023 12:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, ஆரம்பத்தில் நடிகர் சிம்புவை காதலித்து வந்தார். அதன்பின் இருவருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்துவிட்டனர். சிம்புவை அடுத்து நடன இயக்குனர் பிரபுதேவாவை தீவிரமாக காதலித்து மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றா நயன் தாரா.

நயன்தாரா வைத்திருந்த ரகசிய காதல்!! நடிகையிடம் உண்மையை உடைத்த விக்னேஷ் சிவன் | Vignesh Shivan How Secret With Nayanthara Love

ஆனால், பிரபுதேவாவின் முதல் மனைவி போட்ட பிரச்சனையால் அவரையும் பிரிந்து தனிமையில் இருந்து வந்தார். இதனால் சினிமாவிற்கு பிரேக் எடுத்து பில்லா படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார் நயன். இதனைதொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க கமிட்டாகினார்.

அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் தனக்கு பக்கபலமாக இருந்த விக்னேஷ் சிவனை காதலித்து அதன்பின் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வந்தார் நயன். சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.

நயன்தாரா வைத்திருந்த ரகசிய காதல்!! நடிகையிடம் உண்மையை உடைத்த விக்னேஷ் சிவன் | Vignesh Shivan How Secret With Nayanthara Love

சமீபத்தில் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியொன்றில் தன் காதல் விசயங்கள் பற்றியும் நயன் தாரா பற்றியும் பலவற்றை நடிகை சுஹாசினி மணிரத்னத்திடம் பகிர்ந்துள்ளார். எப்படி நடிகை ராதிகாவுக்கு தெரியாமல் இருவரும் ரகசியமாக காதலித்து ரொமான்ஸ் செய்தீர்கள் என்று சுஹாசினி கேட்டுள்ளார்.

ஷூட்டிங்கில் இருவரும் ரொமான்ஸ் செய்யவே இல்லை. எனக்கு தெரிந்த சில நண்பர்களுக்கு மட்டும் தெரியும். நயன் தாராவின் கேரவனுக்கு கூட போகமாட்டேன், அது தப்பாகிவிடுமோ என்று தான். நானும் ரவுடி தான் படத்தின் செகண்ட் செட்யூல் சமயத்தில் தான் டேட்டிங் வாழ்க்கையை ஆரம்பித்தோம்.

அதன்பின்பும் நான் மேம் என்று தான் நயன் தாராவை கூப்பிட்டு வந்தேன். எந்த விதத்திலும் நான் மாற்றிக்கொள்ளவில்லை. நயன் நெருங்கிய முத்தம் கொடுக்கபோகும் காட்சியின் போது கூட நான் பொசஸ்சிவாக இல்லாமல் இயக்குனராக வேலையை பார்த்தேன் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

Gallery