டயட்டுன்னு சொல்லிட்டு 43 வகை சாப்பாட்டு கேக்குதா? விஜய் சேதுபதியை கலாய்த்த இயக்குனர்..

samantha nayanthara vijaysethupathi vigneshshivan kaathuvaakkularendukathal
By Edward Apr 03, 2022 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் என்று போற்றப்படும் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டுகளில் அவர் நடித்து வெளியான பாதிப்படங்கள் நஷ்டத்தை கொடுத்து படுமோசமான விமர்சனத்தையும் பெற்றது.

இதையடுத்து வருடத்திற்கு பல படங்களை கொடுத்தால் இப்படித்தான் ஆகும் என்பதை உணர்ந்து முக்கியமாக கதைக்கு அக்கரை கொடுத்து நடித்து வருகிறார். தற்போது நயன் தாரா, சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிடுவது போல் இருக்கும் வீடியோவை படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

43 வகையாக சாப்பாட்டு பொருட்கள் மத்தியில் இருக்கும் விஜய் சேதிபதியிடன் விக்னேஷ் சிவன் என்ன அண்ணா டிஷ் ரொம்ப கம்மியா இருக்கு இது போதுமா என்று கிண்டல் செய்துள்ளார்.

அதற்கு விஜய் சேதுபதி டயட்ல இருக்கேன் விக்கி என்று கூறியுள்ளார். டயட்டுன்னு சொல்லிட்டு ஃபுல் டயட்டா என்று ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.