நயன்தாராவை சாமி கும்பிடக்கூட விட மாட்டீங்களா!! பத்திரிக்கையாளர்களால் கடுப்பாகி கும்பிட்ட விக்னேஷ் சிவன்
தென்னிந்திய முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாரகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை 7 வருடங்களுக்கு பின் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 மாதத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.

அதன்பின் இருவரும் தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி வந்த நிலையில் சில பிரச்சனைகளையும் சந்தித்தனர். சமீபத்தில் தங்களின் இரட்டை குழந்தைகளின் பெயரை அறிவித்தனர். உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்று பெயரிப்பட்டுள்ளதை நயன் தாராவும் விருதுவிழாவில் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தன் மனைவியுடன் கும்பகோணத்தில் இருக்கும் வளத்தூர் ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு சென்றுள்ளனர்.

இன்று பங்குனி உத்திரம் என்பதால் தொழில் மற்றும் குடும்ப ரீதியான சறுக்கல்களை போக்க குல தெய்வ வழிபாடு செய்து பரிகாரம் செய்ய சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் சாமி கும்பிடும் போது பத்திரிக்கையாளர்கள் வீடியோவுக்கு போஸ் கொடுக்குமாறு நயன் தாரா - விக்னேஷ் சிவனை கூப்பிட்டுக் கொண்டே இருந்தனர்.
இதனால் கடுப்பாகிய விக்னேஷ் சிவன் டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று கையெடுத்து கும்பிட்டார். நயன் தாராவும் சாமி கும்பிடுவதை நிறுத்திவிட்டு அவர்களிடம் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவங்கள சாமி கும்பிடக்கூட விடமாட்டீங்களா என்று திட்டியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Just In - #Nayanthara and #vigneshshivan spotted at Trichy Railway Station. It's a pilgrimage trip to Thanjavur Temple. pic.twitter.com/70ClyKUT31
— Studio Flicks (@StudioFlicks) April 5, 2023