ஏகே 62வில் இருந்து தூக்கி எறிந்த அஜித்துடன் பிரச்சனையா!! உண்மையை கூறிய இயக்குனர் விக்னேஷ் சிவன்
போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக திகழ்ந்து பாடலாசிரியராகவும் பிரபலமானவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தில் நடிகை நயன் தாரவை நடிக்க வைத்து அவருடன் காதலில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் இரட்டை குழந்தை பெற்றெடுத்தபின் அஜித் குமாரின் 62வது படத்தினை இயக்கும் வாய்ப்பு நயன் தாராவால் கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து கதையில் சில மாற்றம் கூறிய அஜித் மற்றும் லைக்கா சொன்னதை கேட்காமல் அந்த கதையை அப்படியே கூறியிருக்கிறார்.
இதனால் விக்னேஷ் சிவனை அஜித் அப்படத்தில் இருந்து தூக்கிவிட்டு மகிழ்திருமேனியை இயக்க கமிட் செய்துள்ளனர். இதனால் விக்னேஷ் சிவனுக்கும் அஜித்துக்கும் கருத்து வேறுபாடு என்று பலவிதமான செய்திகள் வெளியானது.
தற்போது சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தயாரிப்பாளருக்கு 2 ஆம் பாதியில் திருப்தி இல்லை. எனக்கு கிடைச்ச வாய்ப்பு இப்போது மகிழ்திருமேனி சார் மாதிரி ஒருத்தருக்கு கிடைச்சதுல எனக்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். ஒரு ரசிகரா அதை நான் எஞ்சாய் பண்ணுவேன் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்திருக்கிறார்.