ஒரு பெண்ணுடன் இரு ஆண்கள் காதல்.. நயன்தாராவின் வருங்கால கணவருக்கு இப்படியொரு யோசனையா

Nayanthara Vignesh Shivan
By Kathick Apr 30, 2022 04:10 PM GMT
Report

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் இணைந்து நடித்து வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவரிடம், " காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ஒரு ஆண் இரு பெண் காதல் கதையை எடுத்துதீர்கள். இதன்பின் ஒரு பெண் இரு ஆண் காதல் கதையை எடுப்பீர்களா " என்று கேள்வி கேட்டப்பட்டது.

அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் " கண்டிப்பாக எடுப்பேன். என்னால் முடியும் " என்று அதிரடியாக பதிலளித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.