உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.. ஐயோ விக்னேஷ் சிவன் யாரை சொல்கிறார்?
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக படத்துக்கு படம் மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டு வளர்ந்து வருபவர் நயன்தாரா. சினிமா ஒரு புறம் இருக்க தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கி கொள்கிறார்.
சமீபத்தில், தனுஷ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், நயன்தாரா அவருடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
யாரை சொல்கிறார்?
அப்போது விக்னேஷ் சிவன் அந்த நிகழ்ச்சியில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " எங்களுக்கு நீங்கள் எவ்வளவு பிரச்சனைகள் கொடுத்தாலும் நாங்கள் காதல் மற்றும் மரியாதையுடன் இருக்கிறோம்.
அதுதான் எங்களின் பலம். சினிமாவில் பார்த்து இன்ஸ்பைர் ஆன ஒருத்தரை திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தை அமைத்து வாழ்க்கையையும், தொழிலையும் ஷேர் செய்து வருகிறேன்.
இதை யாராலும் உடைக்க முடியாது" என்று கூறியுள்ளார். இதை கேட்டு தற்போது, விக்னேஷ் சிவன் தனுஷை தான் மறைமுகமாக சொல்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.