ரெட்டை குழந்தைகளுக்காக கோடிக்கு ஆசைப்படும் நயன்!! கணவர் ஆரம்பித்த புது தொழில்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா தற்போது பாலிவுட் நடிகையாக ஜவான் படத்தின் மூலம் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தை பெற்றெடுத்தும் நடிப்பில் ஆர்வம் காட்டி கோடியில் சம்பளம் வாங்கி சொத்தை சேர்த்து வருகிறார்.
சேர்த்த சொத்தை வைத்து இரட்டை குழந்தைகளுக்காக பல கோடியில் முதலீடும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம், லிப்பாம் தொழில் உள்ளிட்ட பல தொழில்களை ஆரம்பித்ததை போன்று தற்போது மகன்களுக்காக வேறொரு தொழிலை ஆரம்பித்திருக்கிறார் நயன் - விக்கி ஜோடி.
டிவைன் ஃபுட்ஸ் என்ற இயற்கை சார்ந்த உணவுகளை தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்து கல்லா கட்டவிருக்கிறார்கள். சினிமா கைக்கூடாவிட்டாலும் ஒரு தொழிலதிபராக பணம் சேர்த்து செட்டிலாகிவிடலாம் என்று முடிவெடுத்துள்ளார்கள்.