முறைக்கும் மாமனார்! காதலர் குடும்பத்தோடு ஐக்கியமாகிய நயன் தாரா..

ladysuperstar nayanthara vigneshshivan
By Edward Apr 03, 2022 05:23 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது காதலித்து வரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார்.

பாலிவுட், தமிழ் என பல படங்களில் கமிட்டாகி இருக்கும் நயன் தாரா, தன் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் 62வது படத்தில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்காக நயன் தாரவைவிட விக்னேஷ் அதிகமாக சம்பளம் கேட்டுள்ள செய்தி இணையத்தில் சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார் நயன் தாரா.

தற்போது விக்னேஷ் சிவன் அவரது மாமனாரின் பிறந்தநாளுக்கு நயன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விக்னேஷ் சிவனை குரியன் முறைப்பது போல இருக்கும் லுக்கினை பார்த்து பலர் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.