அசினுடன் ஷூட்டிங்!! இயக்குனருக்கு கேரவன் பின்னால் தெரியாமல் விஜய் செய்த செயல்!!
நடிகர் விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான படம் போக்கிரி. 2007ல் அசின், பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் படமாக மாறியது.
அப்படத்தின் ஷூட்டிங்கில் விஜய் செய்த ஒரு அதிர்ச்சி தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. விஜய் - அசின் தொடர்பான ஒரு பாடலின் ஷூட்டிங்கின் போது விஜய் இடையில் கேரவன் பின் சென்று சென்று வந்துள்ளார்.
இதை பார்த்த பிரபுதேவா விஜய் ஏன் இதை செய்கிறார் என்ன செய்கிறார் என்பதை கவனித்து உதவியாளரை அனுப்பு அப்படி என்ன விஜய் செய்கிறார் என்பதை பார்க்க அனுப்பியுள்ளார்.
அங்கு போய் பார்த்தால் விஜய் வாந்தி எடுத்து கஷ்டப்பட்டு கொண்டிருந்தாராம். பதறிப்போன பிரபுதேவா விஜய்யிடம் என்ன ஆச்சி என்று கேட்க கடுமையான காய்ச்சல் என்று கூறியிருக்கிறார் விஜய்.
உடனே ஷூட்டிங்-ஐ கேன்சல் செய்ய கூறியிருக்கிறார் பிரபுதேவா. ஆனால் விஜய் வேண்டாம் மாஸ்டர் இன்று எடுக்க வேண்டியதை எடுத்துவிடுவோம் என்று தெரிவித்திருக்கிறாராம்.
விஜய் ஒரு படத்தில் கமிட்டாகினால் அதை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் இல்லாமல் முடித்துக்கொடுப்பாராம்.