முதலில் காதல் மன்னன் அவர் தான்!! அஜித் விஜய்க்கே டஃப் கொடுத்து மார்க்கெட்டை இழக்கச்செய்த ஜாக்லெட் பாய்..

Ajith Kumar Prashanth Vijay Gossip Today
By Edward Apr 17, 2023 05:30 PM GMT
Report

சினிமாவை பொறுத்தவரை காலம் காலமாக நடிகர்களுக்கு இடையே சில போட்டிகள் இருந்து கொண்டுத்தான் இருக்கிறது. அப்படி ரஜினி - கமல் இருவருக்கும் போட்டிகள் இருந்ததை போல் அஜித் விஜய்க்கும் போட்டிகள் 90ஸ் காலக்கட்டத்தில் இருந்தே இருந்து வந்தது.

ஆனால் அவர்களுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் நடிப்பில் அலரவிட்ட ஒரு நடிகர் இருந்திருக்கிறார். விஜய், அஜித் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் அவர்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியவர் தான் நடிகர் பிரசாந்த்.

முதலில் காதல் மன்னன் அவர் தான்!! அஜித் விஜய்க்கே டஃப் கொடுத்து மார்க்கெட்டை இழக்கச்செய்த ஜாக்லெட் பாய்.. | Vijay Ajith Is The Only Competitor Thar Actor

அறிமுகமாகிய சில படங்களிலேயே 5க்கும் மேற்பட்ட படங்களை வெற்றிப்படமாக கொடுத்ததோடு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்த்தை பெற்று வந்தார். அவருடைய நடிப்பு, நடனம், அழகு என இளம் பெண்களையும் தன் பக்கம் வைத்திருந்தார்.

விஜய், அஜித் படங்களை பார்க்கும் கூட்டம் இருந்ததை விட பிரசாந்த் படம் பார்க்கும் கூட்டம் தான் அதிகம். அப்படியொரு காதல் படங்களால் கொடிக்கட்டி பறந்து சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தார. அப்படி வந்தவரை ஒரே ஒரு படத்தின் மூலம் அஜித், விஜய் ஓரங்கட்டினார்கள்.

முதலில் காதல் மன்னன் அவர் தான்!! அஜித் விஜய்க்கே டஃப் கொடுத்து மார்க்கெட்டை இழக்கச்செய்த ஜாக்லெட் பாய்.. | Vijay Ajith Is The Only Competitor Thar Actor

விஜய்யின் காதலுக்கு மரியாதை, அஜித்தின் காதல் மன்னன் போன்ற படங்கள் தான் அவர்களை திரும்பி பார்க்க வைத்தது. அதனை பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களால் தங்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் அஜித், விஜய்.