வீட்ட இடிச்சேன்..ஒரு வார்த்தை கூட கேக்கல!! இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஓபன்..
விஜய் ஆண்டனி
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நான் வாடகை வீட்டில் இருக்கும்போது அந்த ஓனர் என்னை காலி பண்ண சொல்லிட்டார்.
வேறு வீடு தேடிக்கொண்டிருக்கும்போது, ஷோபா மேடமும் எஸ் ஏ சந்திரசேகர் சாரும் எங்க வீடு இருக்கே அங்க போய் இருக்கலாம்னு சொன்னாங்க.

வீட்ட இடிச்சேன்
அப்போ என்னோட தகுதிக்கு அந்த வீடு ரொம்ப பெருசு. அதன்பின் அங்கு போய் தங்கி ஸ்டூடியோவுக்கு தேவைமாதிரி சுவற்றை இடித்து சொந்த வீடு மாதிரியே பண்ணிட்டேன். யாரும் ஒருவார்த்தைக்கூட கேக்கல.
வழக்கமா ஒரு வாடகை வீட்டில் ஆணி அடிச்சாக்கூட கேப்பாங்க. அவருக்கும் எனக்கும் அப்படியொரு பந்தம் இருக்கு, அதற்கு காரணம் முதல் படம் எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க, டிஸ்யூம் மூவி முதல் படம் ஆனா ரிலீஸானது சுக்ரன்.

தொடர்ந்து 4 படம் அவருக்கு மியூசிக் பண்ணேன் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்,