Gen Z காதல், பிரேக்கப் கலாட்டா!! பூக்கி பட டிவிட்டர் விமர்சனம்..

Vijay Antony Tamil Movie Review
By Edward Feb 13, 2026 07:30 AM GMT
Report

காதலர் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்து, எடிட்டிங் செய்துள்ள பூக்கி படம் இன்று பிப்ரவரி 13 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் மருமகன் அஜய் தீஷன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

Gen Z காதல், பிரேக்கப் கலாட்டா!! பூக்கி பட டிவிட்டர் விமர்சனம்.. | Vijay Antony Produced Pookie X Review In Tamil

சலீம் படத்தின் இயக்குநர் கணேஷ் சந்திரா இப்படத்தினை இசையமைத்துள்ளார். அறிமுக நடிகையான தனுஷா, பாண்டியராஜன், சுனில், லக்ஷமி மஞ்சு, விவேக் பிரசன்னா, ஆதித்யா, கதிர், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை பார்த்த பலரும் எக்ஸ் தளத்தில் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

Gen Z காதல், பிரேக்கப் கலாட்டா!! பூக்கி பட டிவிட்டர் விமர்சனம்.. | Vijay Antony Produced Pookie X Review In Tamil

டிவிட்டர் விமர்சனம்

அதில் சினிமா விமர்சகர், ரமேஷ் பாலா, இன்றைய யூத்களின் காதல், பிரேகப் கதை தான் இந்த பூக்கி. படத்திற்கு 3.25 ஸ்டார் ரேட்டிங் கொடுத்தும் அஜய் தீஷன், தனுஷா இருவரின் வேலை, சிறப்பாக ஜாலியாக செய்து ரசிகர்களை கட்டிப்போடுகிறது என்று பாராட்டியிருக்கிறார்.

மேலும் ஒருவர், விஜய் ஆண்டனி மீண்டும் தன்னுடைய பழைய துள்ளலான ஸ்டைலில் மியூசிக் போட ஆரம்பித்துள்ளார். மற்றொருவர், பூக்கி படத்தின் முதல் பாதியில் சிலம்பரசனின் ரெஃபரன்ஸ் இருக்கிறது. இடைவேளையில் சிம்புவின் பஞ்ச் டயலாக் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.