விஜய், அட்லீயால் சீரழிந்துபோன தயாரிப்பு நிறுவனங்கள்.. இன்று வரை பரிதாப நிலை

vijay atlee ags thenandal flims
By Kathick Feb 03, 2022 01:50 PM GMT
Report

தமிழ் திரையுலகில் தொடர்ந்து மூன்று சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த கூட்டணி, விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. ஆம், இந்த கூட்டணியில் இதுவரை வெளிவந்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களும் சூப்பர்ஹிட் என கூறப்படுகிறது.

ஆனால், தயாரிப்பாளர்கள் இருவரும் தலையில் துண்டை தான் போட்டுகொண்டு இருக்கிறார்கள். ஆம் மெர்சல் படத்தை தயாரிப்பு தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனமும் தற்போது அகல பாதாளத்தில் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

அந்த அளவிற்கு மெர்சல் மற்றும் பிகில் இரு திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் இரு நிறுவனங்களுக்கும் மாபெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நஷ்டத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து, தற்போது தான் நாய் சேகர் எனும் சிறு பட்ஜெட் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இவர் நிலைமையே எவ்வுளவோ பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஏனென்றால், மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் இதுவரை எந்த ஒரு படத்தையும் தயாரித்து வெளியிடவில்லை. இனிமேல் ஆவது விஜய் - அட்லீ கூட்டணியை புக் செய்வதற்கு முன் கவனமாக இருக்க தயாரிப்பு நிறுவனங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.