இனிமேல் விஜய் படத்தில் பாட மாட்டேன்! மறைந்த எஸ்பிபி கூறியதற்கு இதுதான் காரணமா?

singer vijay tamilcinema spb jilla priyamanavale
By Edward Mar 06, 2022 06:45 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் லிஜெண்ட் பாடகராக திகழ்ந்து , இந்தியா முழுவதும் சுமார் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பல மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர் எஸ்பி சுப்ரமணியம். மேலும் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல தேசிய விருதுகளையும் பெற்ற எஸ்பிபி சில வருடங்களுக்கு முன் கொரோனா தொற்று காரணமாகவும் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

அவரின் உடலை இந்த உலகம் இழந்தாலும் அவரின் பாடலால் எப்போது உயிரோடுதான் இருப்பார் என்று பெருமையுடன் ரசிகர்களும் பிரபலங்களும் கூறிவார்கள். அப்படிபட்ட பாடகர் இந்திய முன்னணி நடிகர்கள் படத்தில் பாடிய எஸ்பிபி பிரியமான தோழி படத்திற்கு பிறகு நடிகர் விஜய் படத்தில் பாடுவதை நிறுத்தினாராம்.

இசையில் அதிக அக்கறை கொண்ட விஜய் ஒரே வார்த்தை கூறியதுதான் அதற்கு காரணமாம். விஜய், சிமரன், எஸ்பிபி போன்றவர்கள் நடித்த பிரியமானவளே படத்தின்போது ஒரு பாடல் பதிவேற்றப்பட்டது. ஆனால் அந்த பாடலை விஜய் பாடி நடிக்கும்போது ஒரு வயதானவர் குரல் போல் இருந்ததாக கூறினாராம் தளபதி.

அதே பாடலை வேறு ஒரு பாடகரை பாட வைத்து படமாக்கினார்களாம். அப்படத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியம் குரல் தனது செட் ஆகாது என விஜய் ஓப்பனாக சொன்னதால் எஸ் பி பாலசுப்ரமணியம் இனி விஜய் படங்களில் பாட மாட்டேன் எனவும் தெரிவித்து விட்டாராம்.

ஆனால் வெறுப்பில் எஸ்பிபி இப்படி கூறவில்லை. விஜய் சொன்னதை மனமாற புரிந்து கொண்டு தான் இந்த முடிவை எடுத்திருந்தார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஜில்லா படத்தில் மோகன்லாலுக்கு குரல் கொடுத்து முதல் பாடல் பாடியிருந்தார்.

விஜய் அவரது இறுதி அஞ்சலிக்கு முதல் ஆளாக இருந்து எஸ்பி சரணுக்கு ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.