விஜய் பேனரால் நடந்த விபரீதம்.. விபத்தில் சிக்கிய 10 வயது சிறுவன்

Vijay Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 26, 2024 06:56 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

இந்திய அளவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விஜய். அண்மையில் இவர் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்நிலையில் விஜய்க்காக வைத்த பிறந்தநாள் வாழ்த்து பேனரால் நடந்த விபரீதம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் சாலை ஓரம் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்து இருந்தனர்.

காற்றின் வேகத்தில் ரோட்டில் சென்று கொண்டு இருந்த 10 வயது சிறுவன் மீது அந்த பேனர் விழுந்தது. நல்வாய்ப்பாக அந்த சிறுவன் காயம் இன்றி தப்பித்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

விஜய் பேனரால் நடந்த விபரீதம்.. விபத்தில் சிக்கிய 10 வயது சிறுவன் | Vijay Banner Fall Down On 10 Year Old Boy