ஒரு காலத்துல ஹாலிவுட் படத்திற்கே டஃப் கொடுத்தவருடா எங்க தளபதி.. கே.ஜி.எப் எல்லாம் தூசு டா
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இப்படம், வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியாகிறது. பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு பின்னர், சமூக வலைத்தளத்தில் பீஸ்ட் Vs கே.ஜி.எப் 2 என்பதுபோல் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கண்டிப்பாக விஜய் இந்த போட்டியில் தோற்றுவிடுவார் என்றும், இல்லை இல்லை விஜய் தான் வசூல் மன்னன், அவர் தான் கண்டிப்பாக ஜெயிப்பார் என்றும் கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இதற்குஇடையில் நெட்டிசன்கள் பலரும், விஜய்யை கலாய்க்கும் விதமாக மீம் போட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், காதலுக்கு மரியாதை - டைட்டானிக், வேலாயுதம் - அவதார் என விஜய் படங்கள் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் நாள் அன்றே வெளிவந்து சூப்பர்ஹிட்டாகியுள்ளது. இதில், எங்களுக்கு கே.ஜி.எப் படமெல்லாம் ஒரு போட்டியா..! என்று மீம் போட்டு வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம், மண்ணை கவ்வப்போது விஜயா இல்லை ராக்கி பாய்யா என்று..
