என் நெஞ்சில் குடியிருக்கும்! இந்த வார்த்தை கேட்காம பண்ணீட்டீங்களே.. பீஸ்ட் பரிதாபம்

vijay nelson poojahegde sunpictures beast audiolaunch
By Edward Mar 16, 2022 03:30 AM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியாகவிருக்கும் படம் பீஸ்ட். வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸாகும் என்ற அறிவிப்பை அறிவித்தனர். இப்படத்தின் அரபிக் குத்து பாடல் ஒரு மாதத்தில் 170 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய சாதனையை பெற்றுள்ளது.

இந்நிலையில் விஜய் படங்கள் என்றாலே ஆடியோ லான்ச் தான் மிகப்பெரிய பிளஸ்ஸாக இருக்கும். என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற வார்த்தையோடு விஜய் பேச ஆரம்பிக்கும் போது ரசிகர்களின் ஆரம்வாரம் பெரியளவில் இருக்கும்.

அந்த ஒரு வார்த்தைக்காகவே ரசிகர்கள் பல லட்சத்தில் ஆடியோ லான்ச்சில் கூடுவார்கள். அதற்கு முட்டுக்கட்டாக பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா கிடையாது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

படத்தின் மிகப்பெரிய பிரமோஷனே இந்த நிகழ்வு தான். கொரோனா தொற்றின் 4 ஆம் அலை பரவ வாய்ப்புள்ளதாக இந்நிகழ்ச்சியை விஜய் வேண்டாம் என்று கூறியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எதற்கும் துணிந்தவன் படம் எந்த பிரமோஷன் விஷயத்தையும் செய்யாமல் இருந்த சன் பிக்சர்ஸை கிண்டல் செய்து வரும் நிலையில் தற்போது இந்த முடிவை பார்த்து விஜய் ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட் என்று டிவிட்டரில் டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.