விஜய்யை வைத்து டிஆர்பிக்கு பிளான் போட்ட தொலைக்காட்சி! 9 வருஷமாச்சே?
நடிகர் விஜய் நடிப்பில் வரும் ஏப்ரம் 13ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கொடுத்துள்ளது.
இன்னும் படம் வெளியாக இரு வாரங்களே இருக்கும் நிலையில் பிஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் நடத்த வேண்டாம் என்று விஜய் கூறியதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த முடிவினை எடுத்துள்ளது.
இதற்கு வேறொரு காரணங்களும் கூறப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் வேலைகளாக அப்படத்தின் பாடல்கள் கடந்த வாரங்களாக டிரெண்ட்டாகி வருகிறது.
இந்நிலையில் விஜய் இப்படத்தின் ஆடியோ லான்ச்சிற்கு பதிலாக ஒரு நேர்காணல் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளாராம். படக்குழுவினருடன் இந்த நேர்காணல் நிகழ்ச்சி சீக்கிரமே நடக்கவுள்ளதாம். அந்நிகழ்ச்சி ஏப்ரல் 10ல் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.
ரசிகர்களின் 9 வருட ஏக்கம்:-
விஜய் பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் 30 நிமிடம் அளவிற்கு பேசி ரசிகர்களை ஈர்த்து வந்தார். ஆனால் 9 வருடங்களுக்கு முன் விஜய் தலைவா படத்தின் போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடித்திருந்த போது ரிலீஸிற்கு முன், விஜய் மற்றும் படக்குழுவினர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதன்பின் தற்போது விஜய் இந்த நிகழ்ச்சிக்கு ஓகே கூறியுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.