அஜித் கொஞ்சம் ஓரம் போங்க.. எப்போவும் நம்பர் 1 விஜய் தான்

ajith vijay song record arabic kuthu
By Kathick Feb 14, 2022 05:20 PM GMT
Report

பீஸ்ட் படத்தின் முதல் பாடல் 'அரபிக் குத்து' இன்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது. வெளிவந்த 5 நிமிடத்தில் 3.75 லட்சம் பார்வையாளர்களை அரபிக் குத்து பாடல் பெற்றிருந்தது.

இந்நிலையில் ஒரு மணி நேரத்தில் சுமார் 5 மில்லியன்களுக்கு மேல் பார்வையாளர்களை அரபிக் குத்து பெற்றுள்ளது. அதே போல் 30 நிமிடத்திற்குள் சுமார் 5 லட்சம் லைக்ஸ் பெற்று மற்றொரு சாதனையையும் படைத்து, அஜித்தின், 'நாங்க வேற மாறி' பாடலின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்த பாடல் தான், நடிகர் விஜய்யின் பாடல்களில் மிக வேகமாக 1 மில்லியன் லைக்ஸ் பெற்ற முதல் பாடல் என்ற சாதனையையும் படைத்துள்ளது என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதன்முலம், இதற்குமுன் அஜித் செய்து வைத்திருந்த அணைத்து சாதனையையும் விஜயின் அரபிக் குத்து பாடல் முறியடித்துள்ளது என்று கூறப்படுகிறது.